;
Athirady Tamil News

தேசிய கால்நடை அபிவிருத்திச் சபை தலைவரின் விளக்கமறியல் நீடிப்பு..!!

0

இலஞ்சம் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தேசிய கால்நடை அபிவிருத்திச் சபையின் தலைவர் கே.எம். முத்துவிநாயம் உள்ளிட்ட இருவரும் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இருவரையும் எதிர்வரும் 23ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு இன்று கொழும்பு பிரதான நீதவான் ரங்க திசாநாயக்க முன்னிலையில் அழைக்கப்பட்ட போது, சம்பவம் தொடர்பில் மேலும் விசாரணை இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி இருவரையும் மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடுமாறு ஆணைக்குழு நீதிமன்றத்தை கோரியது.

சந்தேகநபர்களுக்கு பிணை வழங்குமாறு அவர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி கோரிக்கை விடுத்த போதிலும் அதனை நிராகரித்த நீதவான் விளக்கமறியல் உத்தரவை பிறப்பித்தார்.

தேசிய கால்நடை அபிவிருத்திச் சபைக்கு சொந்தமான மல்சிறிபுர பிரதேசத்தில் உள்ள உணவகம் ஒன்றை 02 ஆண்டுகளுக்கு வாடகைக்கு வழங்குவதற்கு 12 இலட்சம் ரூபா இலஞ்சமாக கோரப்பட்டுள்ளது.

பின்னர் அது 06 இலட்சம் ருபாவாக குறைக்கப்பட்டு வேறொரு நபர் ஊடாக அந்த இலஞ்சப் பணத்தைப் பெற்றுக் கொள்ளும் போது இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × 1 =

*