யானை தாக்கியதில் ஒருவர் பலி..!!

கல்கமுவ, பலுகன்தேவ பகுதியில் காட்டு யானை தாக்கியதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கல்கமுவ, பலுகன்தேவ பகுதியை சேர்ந்த 49 வயதுடைய பிரேமதிலக என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்று (18) இரவு 7 மணியளவில் தனது தாயுடன் வீட்டில் இருந்த வேலையில் தோட்டத்தில் ஏதோ சத்தம் கேட்பதாக தெரிவித்து வீட்டில் இருந்து வெளியிறங்கிய போதே அவர் யானை தாக்குதலுக்கு இலக்காகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவரின் சடலம் கல்கமுவ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் கல்கமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.