;
Athirady Tamil News

போதை மாத்திரைகளுடன் இருவர் கைது..!!

0

யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலைக்கு போதை மருந்து கடத்தலில் ஈடுபட்ட இரண்டு சந்தேகநபர்கள் இன்று (19) கைது செய்யப்பட்டுள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்தனர்.

ஒரு பஸ்ஸில் போதை மருந்துகளை கொண்டு வந்தபோது திடீரென நடத்திய தேடுதல் வேட்டையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் வைத்திருந்த 1670 போதை மருந்துகள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலை பிரதேசத்தைச் ​சேர்ந்த 23 மற்றும் 25 வயதான இரு இளைஞர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளதுடன், ஓமந்தை பொலிஸார் மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 − nine =

*