;
Athirady Tamil News

பதினைந்தாவது அகவையில் காலடி பதிக்கும், “அதிரடி” இணையத்திற்கு வாழ்த்துக்கள்..!-த.சித்தார்த்தன் (புளொட்)

0
பதினைந்தாவது அகவையில் காலடி பதிக்கும், “அதிரடி” இணையத்திற்கு வாழ்த்துக்கள்!-த.சித்தார்த்தன்
“அதிரடி” இணையத்தளம் தனது ஊடகப் பணியில் பதின் நான்காவது அகவையினைப் பூர்த்தி செய்து பதினைந்தாவது அகவையில் காலடி பதிப்பதையிட்டு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
“அதிரடி” இணையத்தளம் இயன்றளவு நடுநிலையாக இயங்கி சகல தமிழ்த் தரப்புக்களினுடைய கருத்துக்களையும் மிகத் தெளிவாகவும், இலகுவாக புரியக்கூடிய வகையிலும் எடுத்துக்கூறி வந்திருக்கின்றது.
“அதிரடி” இணையத்தளம் பல நெருக்குவாரங்களுக்கு மத்தியிலும் தனியே செய்திகளை மாத்திரம் கொடுப்பதோடு நின்றுவிடாது, இங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு உதவிகளையும் செய்து வருகின்றது.
குறிப்பாக, பாடசாலைப் பிள்ளைகளின் கல்வியினை மேம்படுத்துவதற்கு பல உதவிகளை வழங்கி வருவதோடு, பிள்ளைகள் பாடசாலைகளுக்கு சென்று வருவதற்கான உதவிகளையும் தொடர்ந்து செய்து வருகின்றது.
“அதிரடி”யின் இத்தகைய சேவைகளையும், ஊடகப் பணியினையும் வெகுவாக பாராட்டுவதுடன் “அதிரடி”யின் பணி இன்னும் பல ஆண்டுகள் தொடர இதனபூர்வமான வாழ்த்துக்கள்.
நன்றி,
தர்மலிங்கம் சித்தார்த்தன், 
தலைவர், 
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்),
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (டி.பி.எல்.எவ்),
14.10.2018.
You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × two =

*