;
Athirady Tamil News

ஆறுமுகநேரியில் தந்தை கல்லறையில் தொழிலாளி தற்கொலை..!!

0

ஆறுமுகநேரி இலங்கத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுதாகர்(வயது 42). கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி பிரிந்து சென்று விட்டார். இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு செட்டியாபத்தை சேர்ந்த மலர் என்பவரை 2-வது திருமணம் செய்தார்.

இந்நிலையில் கணவன்- மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு மலர் தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதில் மனமுடைந்து காணப்பட்ட சுதாகர் நேற்று குதிரைக்காரன்குளத்தில் உள்ள அவரது தந்தை சுந்தரமணி கல்லறைக்கு சென்றார். பின்னர் அப்பகுதியில் உள்ள ஒரு மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்தார்.

இது குறித்து தகவலறிந்த ஆறுமுகநேரி போலீசார் சுதாகர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு காயல்பட்டிணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × five =

*