;
Athirady Tamil News

“அதிரடி”க்கான வாழ்த்து: யார் தலையிட்டாலும், தடுமாறாமல் தமக்கென்று ஒரு பாணி “அதிரடி”க்கு உண்டு.. -பா.கஜதீபன்

0

“அதிரடி”க்கான வாழ்த்து: யார் தலையிட்டாலும், தடுமாறாமல் தமக்கென்று ஒரு பாணி “அதிரடி”க்கு உண்டு.. -பா.கஜதீபன்

“அதிரடி”யின் 15 ஆண்டுகால நெடும்பயணத்தில் கடந்த 05 ஆண்டுகளாக வாழ்த்துச் செய்தி வழங்கி வரும் ஒருவன் என்ற ரீதியில், “அதிரடி”யின் இன்றைய வளர்ச்சி குறித்து மிகவும் சந்தோஷமடைகின்றேன். ஒவ்வொரு ஆண்டும் ஏதோவொரு விதத்தில் தன்னை இன்னும் மெருகேற்றிக் கொண்டு, வளர்ந்துவரும் இணையத்தளமாக “அதிரடி” செயற்பட்டு வருவதனை அருகிலிருந்து அவதானித்தும், அதன் வாசகனாகவும் இருந்து வருகின்றவர்களில் நானும் ஒருவன் என்பதில் பெருமையடைகின்றேன்.

அந்த வகையில் போட்டி மிக்க இன்றைய ஊடக உலகில் 14 வருடங்களை வெற்றிகரமாக நிறைவு செய்து, 15ஆவது ஆண்டில் காலடி வைத்து, இன்றும், தொடங்கிய நாளில் காணப்பட்ட அதே உற்சாகத்துடன் செயற்பட்டுக் கொண்டு இருப்பது சாதாரண விடயமல்ல.

ஜனநாயக் கட்டமைப்பில் ஊடகத்துறையினுடைய முக்கியத்துவம் அல்லது பங்களிப்பு மிக முக்கியத்துவமான ஒன்றாகும். ஒரு விடயத்தை சரியானதை தவறென்றும், தவறானதைச்சரியென்றும் நிரூபிக்கவல்ல ஆற்றல் இன்றைய நாட்களில் இலத்திரனியல் ஊடகங்களுக்குண்டு. சில இலத்திரனியல் ஊடகங்கள் தமது சக்திகளை தவறான வழிகளில் செலுத்தி, ஊடக அறம் என்றால் என்ன? எனும் போக்கில் நடந்துகொள்வதனை நாம் கண்டு வருகிறோம்.

ஆனால் “அதிரடி” அவற்றிலிருந்து மாறுபட்டு சரியானதைச் சரி என்று சொல்லும் அதேவேளை, தவறானவற்றை தவறு என்று யார் தலையிட்டாலும் தடுமாறாமல் தமக்கென்று ஒரு பாணியை வகுத்து ஊடக உலகில் தனித்துவமாக செயற்பட்டு வருகின்றது. அது தான் “அதிரடி”யின் தனிச்சிறப்பாகவும் இருந்து வருகின்றது. இது என்றும் தொடரும் என்பதே எனது திடமான நம்பிக்கையுமாகும்.

இவ்வாறான சமூகப்பணியில் ஈடுபட்டு வரும் “அதிரடி” இணையத்தளத்திற்கும் அதன் ஆசிரியர் குழாமிற்கும், செய்தியாளர்களுக்கும், வாசகப் பெருமக்களுக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதுடன், பணிகள் சிறக்கவும் இயற்கையை இறைஞ்சுகிறேன்.
நன்றி.

பா.கஜதீபன்
வடமாகாணசபை உறுப்பினர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × three =

*