;
Athirady Tamil News

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ரணிலுக்கு ஆதரவு..!!

0

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு தமது ஆதரவை தெரிவிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தக் கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளர் பைசர் காசிம் இதனைக் கூறியுள்ளார்.

இன்று காலை கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் ஏகமனதாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் 07 உறுப்பினர்களும் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவை தெரிவிக்க உள்ளதாக அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 − eleven =

*