;
Athirady Tamil News

தேர்தல் பிரசாரத்தில் கண்ணீர் விட்டு அழுத கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி..

0

கர்நாடகா மாநிலத்தில் நடைபெறும் இடைத் தேர்தலையொட்டி முதல்-மந்திரி எச்.டி.குமாரசாமி தேர்தல் பிரசாரம் செய்தார்.

‘‘நான் கடவுள் அருளால் முதல்-மந்திரி ஆகி இருக்கிறேன். அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறேன்.

ஆனால் துரதிருஷ்டவசமாக சிலர் எனது நிர்வாகம் மீது வீணாக பழி சுமத்தி பிரசாரம் செய்து வருகிறார்கள். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று விவசாய கடன்கள் ரத்து செய்யப்பட உள்ளன.

மாண்டியா மாவட்டத்தில் உள்ள 10 லட்சம் விவசாயிகளுக்கு வருகிற நவம்பரில் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட உள்ளது. ஏற்கனவே எனது அரசால் மாண்டியா மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.500 கோடி கடன் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும் கூடுதலாக ரூ.60 கோடி ரத்தும் விரைவில் செய்யப்படும். எனவே எனது பட்ஜெட்டை ‘மாண்டியா பட்ஜெட்’ என பா.ஜனதா தலைவர்கள் கூறி வருகின்றனர்.

எனவே அவர்கள் தங்கள் கட்சிக்காக இங்கு வாக்கு கேட்க எந்த உரிமையும் இல்லை. முதியோர் உதவி தொகை உயர்த்தப்படும் என பட்ஜெட்டில் அறிவித்து இருக்கிறோம். இது போன்று அனைத்து நலத்திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பேசிக் கொண்டிருந்த போது மிகவும் உணர்ச்சி வசப்பட்ட அவர் கண்ணீர் விட்டு அழுதார். எனது கடைசி மூச்சு இருக்கும் வரை மக்களுக்கா உழைப்பேன் என்று உறுதி அளித்தார்.

மிகப்பெரிய இருதய ஆபரேசனுக்கு பிறகு மக்களின் ஆசியில் மீண்டும் உயிர் பிழைத்து திரும்பியதாக தெரிவித்தார். =

You might also like

Leave A Reply

Your email address will not be published.

11 − three =

*