;
Athirady Tamil News

அசர்பைஜான் தலைநகர் பகு சுரங்க ரெயில் பாதை விபத்தில் 229 பேர் பலியான நாள்: 28-10-1995..!!

0

1834 – மேற்கு ஆஸ்திரேலியாவின் பிஞ்சாரா என்ற இடத்தில் பிரித்தானியக் குடியேறிகளினால் 30 நூங்கார் பழங்குடியினர் கொல்லப்பட்டனர்.

1886 – நியூயார்க் துறைமுகத்தில் விடுதலைச் சிலையை அரசுத்தலைவர் குரோவர் கிளீவ்லாண்ட் திறந்து வைத்தார்.

1891 – ஜப்பானில் நோபி சமவெளியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 7,000-ற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

1918 – முதல் உலகப்போர்: ஆத்திரியா- அங்கேரியில் இருந்து செக்கோசிலோவாக்கியா விடுதலையை அறிவித்தது. 300 ஆண்டுகளுக்குப் பின்னர் செக்கோசிலவாக்கியா விடுதலை அடைந்தது.

1918 – புதிய போலந்து அரசு மேற்கு கலீசியாவில் உருவானதை அடுத்து, போலந்து- உக்ரைனியப் போர் ஆரம்பமானது.

1922 – பெனிட்டோ முசோலினி தலைமையில் இத்தாலிய பாசிஸ்டுகள் இத்தாலிய அரசைக் கைப்பற்றினர்.

1940 – இரண்டாம் உலகப் போர்: இத்தாலியின் காலக்கெடுவை கிரேக்கம் ஏற்க மறுத்ததையடுத்து, கிரேக்க- இத்தாலியப் போர் ஆரம்பமானது. இத்தாலி கிரேக்கத்தை அல்பேனியா ஊடாக ஊடுருவியது.

1942 – கனடா ஊடான அலாஸ்கா வரையான அலாஸ்கா நெடுஞ்சாலை அமைக்கப்பட்டது.

1956 – எல்விஸ் பிரெஸ்லி தேசியத் தொலைக்காட்சியில் போலியோ தடுப்பூசியை ஏற்றிக் கொண்டார்.

1958 – 23-ம் யோவான் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1962 – கியூபா ஏவுகணை நெருக்கடி முடிவுக்கு வந்தது. சோவியத் பிரதமர் நிக்கிட்டா குருசேவ் சோவியத் ஏவுகணைகளை கியூபாவில் இருந்து அகற்ற உத்தரவிட்டார்.

1990 – ஜோர்ஜியாவில் வரலாற்றில் முதற்தடவையாக பல-கட்சி நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெற்றது.

2006 – தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே 8 மாதங்களாகத் தடைப்பட்டிருந்த அமைதிப் பேச்சுக்கள் ஜெனீவாவில் மீண்டும் ஆரம்பமாயின.

2014 – நாசாவின் சிக்னசு ஆளில்லா விண்கலம் வர்ஜீனியாவில் இருந்து புறப்பட்டு சில நிமிட நேரத்தில் வெடித்துச் சிதறியது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

ten − seven =

*