;
Athirady Tamil News

தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா வழங்குவதாக உறுதி..!!

0

மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளத்தை நிச்சயமாக புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பெற்று தருவதாக உறுயளித்துள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் காரணமாக புதிய பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவு செய்யபட்ட செய்தியை அறிந்து புதிய பிரமருக்கு வாழ்த்து சொல்ல சென்றிருந்த வேலை அவர் இந்த வாக்குறிதியினை வழங்கியதாக ஆறுமுகன் தொண்டமான் மேலும் தெரிவித்துள்ளார்.

மலையக மக்கள் கடந்த இரண்டு வருடகாலமாக அடிப்படை சம்பளம் ஆயிரம் ரூபாவை கோரி வருகின்ற நிலையில் மலையகத்தில் தற்பொழுது தோட்ட தொழிலாளர்கள் பாரிய ஆர்பாட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் நான் புதிய பிரதமரை வாழ்த்து சொல்ல சென்றிந்த சந்தர்ப்பத்தில் என்னை கட்டித் தழுவி இம் முறை ஆறுமுகன் தொண்டமானுடைய பிரச்சினைக்கு முதல் தீர்வினை பெற்று கொடுப்பதாக பிரதமர் வாக்குறுதி அளித்ததாக ஆறுமுகன் தொண்டமான் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தோட்ட தொழிளார்களுடைய சம்பளம் விடயம் தொடர்பில் நாட்டின் ஜனாதிபதியோடும் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவோடும் கலந்துரையாடி உள்ள தோடு எதிர்வரும் காலங்களில் ஜனாதிபதி மற்றும் புதிய பிரதமர் ஆகியோரின் கரங்களை பலப்படுத்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் செயல்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இம்முறை நிச்சயமாக தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளத்தை புதிய வழிமுறைகளை பயன்படுத்தி பெற்று கொடுப்பபோம். அதன் காரணமாகத்தான் நாங்கள் இது போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்று கொடுக்க கூடிய தலைவர்களை தேர்ந்தெடுத்துள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் மேலும் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

12 + eight =

*