;
Athirady Tamil News

மலர்ந்திருக்கும் மகிந்தராஐபக்ச தலைமையிலானஅரசு தமிழ் மக்களுக்கு அமைதியும் சுபீட்சமும் நிறைந்த எதிர்காலத்தினை கொடுக்கும்..!!

0

மலர்ந்திருக்கும் மகிந்தராஐபக்ச தலைமையிலானஅரசு தமிழ் மக்களுக்கு அமைதியும் சுபீட்சமும் நிறைந்த எதிர்காலத்தினை கொடுக்கும்.

போரினால் பெற்ற வடுக்கள் ஆறும் முன்பே பொருளாதார வீட்சி, சமூகப்பிறழ்வுகள், சமூக வன்முறைகள் என பாரியதொரு பிரச்சினையை தமிழ் மக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் இருண்ட யுகத்தில் ஓர் ஒளிக்கீற்றாக மகிந்தராஐபக்ச இந்த நாட்டின் பிரதமராக தெரிவாகி
இருக்கின்றார். தமிழ் மக்கள் சார்பில் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

தமிழ் மக்களுடைய தற்போதய தேவையானது உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசும் நரித்தந்திரம் இல்லாத ஓர் தலைவர் வேண்டும், இந்தவகையில் நேருக்கு நேர் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் தன்னம்பிக்கையும் தைரியமும் உடைய தலைவர் மகிந்தராஐபக்ச என்பதும் அவர்
ஓர் யதார்த்த வாதி என்பதும் நாம் கண்ட அனுபவமாகும்.

தமிழ் மக்கள் கௌரவமாகவும் சுதந்திரமாகவும் வாழ்வதற்கு பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக பாதுகாப்பை உறுதிப்படுத்துவதும் அடிப்படை தேவையாகின்றது. மக்களுக்கு சொந்தமான காணிகளை மக்களிடம் கொடுப்பதும், அரசியல் கைதிகள் விடுதலையும் நடைமுறைப்படுத்தப்படும் என்பதில் சந்தேகம் இல்லாமல் நம்பிக்கை கொள்கின்றோம்.

இருக்கின்றவன் சரியாக இருந்தால் சிதைக்கின்றவன் சரியாக சிதைப்பான் என்பது பழமொழி நாம் சரியாக இருப்போமாக இருந்தால் சுயநிர்ணயமும் நடைமுறையில் பெற்றுக்கொள்வோம் என்பதே நிதர்சனமாகும். எமது உரிமையை வேறொருவர் எமக்கு பெற்றுத்தந்துவிட முடியாது அதை நாம் தான் நடைமுறையில் அனுபவிக்க வேண்டும்.

எமது பிரச்சினைகளை தீரா பிரச்சினையாக்கிக் கொண்டு இருப்பவர்கள் அரசுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் முகவர்களாக செயற்படும் எமது தமிழ் அரசியல் தலைமைகளே ஆகும். முகவர்களுக்கு இது ஓர் வியாபாரம் ஆனால் தமிழர்களுக்கு இது ஓர் அவமானம். பட்ட
அனுபவங்களைக் கொண்டு நாம் ஓர் அணியில் மகிந்தராஐபக்ச உடன் கைகோர்ப்போம். இலங்கை
எமது நாடு என்போம், வடக்கு கிழக்கு எமது வீடு என்போம்.

தம்பித்துரை றஜீவ்
அமைப்பாளர்
யாழ் மாவட்டம்
ஶ்ரீ லங்கா பொதுஐன முன்னணி.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fourteen − 1 =

*