;
Athirady Tamil News

புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றதையடுத்து ஹற்றனில் வரவேற்பு நிகழ்ச்சிகள்..!! (படங்கள்)

0

புதிய பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றதையடுத்து ஹற்றனில் வரவேற்பு நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன்போது, ஹற்றன் நகருக்கு வருகை தந்த நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான ஆறுமுகன் தொண்டமானுக்கு நகரவாசிகள் பாரிய வரவேற்பினை அளித்து பொன்னாடை போர்த்தி வரவேற்பளித்தனர்.

இதன்போது நகரில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டு அனைவரும் மகிழ்ச்சியடைந்ததோடு, புதிய பிரதமரான மஹிந்த ராஜபக்ஷவின் உருவப் படங்களை ஏந்தி கோஷமிட்டனர்.

இந்நிகழ்விற்கு நகரத்தில் பொலிஸாரின் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.

இதேவேளை நாட்டில் ஏற்பட்டுள்ள புதிய அரசியல் நிலவரம் தொடர்ந்தும் சுபீட்சமாக இடம்பெற வேண்டும் எனவும், மஹிந்த மற்றும் மைத்திரியின் இந்த புதிய அரசாங்கம் பல அபிவிருத்திகளை கண்டு புதிய பயணத்தை நோக்கி முன்னெடுத்து செல்ல வேண்டும் எனவும் ஹற்றன் ஸ்ரீசிவசுப்பிரமணிய ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகளில் மக்கள் ஈடுபட்டமையும் குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eighteen − sixteen =

*