;
Athirady Tamil News

பூங்கா அருகே சூட்கேசுக்குள் 8 வயது சிறுமியின் பிரேதம் – டெல்லியில் பரபரப்பு..!!

0

டெல்லியின் வடக்கு பகுதியில் உள்ள திம்மார்பூர் பகுதியில் ஒரு பூங்காவின் அருகே ஒரு மர்ம சூட்கேஸ் கேட்பாரற்றுக் கிடப்பதாக போலீசாருக்கு இன்று காலை தகவல் வந்தது.

இதைதொடர்ந்து, காலை 7.30 மணியளவில் அங்கு விரைந்துசென்ற போலீசார், அங்கு கிடந்த சூட்கேசை திறந்து பார்த்தனர். பையினுள் கழுத்து நெறித்து கொல்லப்பட்ட 8 வயது சிறுமியின் பிரேதம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

கொல்லப்பட்ட சிறுமி யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என்பது தொடர்பாக விசாரித்துவரும் போலீசார், பிரேதத்தை கைப்பற்றி, பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

six − 5 =

*