;
Athirady Tamil News

சீனாவில் நிலக்கரி சுரங்க விபத்தில் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு..!!

0

சீனாவின் பல பகுதிகளில் அனுமதி இல்லாத நிலக்கரிச் சுரங்கங்கள் உரிய பாதுகாப்பு அம்சங்களை கடைபிடிக்காமல் இயங்கி வருகின்றன. இதனால் அடிக்கடி விபத்துகளில் சிக்கி பல தொழிலாளர்கள் உயிரிழக்க நேரிடுகிறது.

இந்நிலையில், நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள ஷாங்டாங் மாகாணத்துக்குட்பட்ட ஒரு நிலக்கரி சுரங்கத்தினுள் கடந்த 20-ம் தேதி மிகப்பெரிய பாறை ஒன்று வெடித்துச் சிதறியது. இதனால், அந்த சுரங்கத்துக்குள் செல்லும் இரு நுழைவு வாயில்களும் மூடிக்கொண்டன.

இந்த இடிபாடுகளுக்குள் சிக்கி 11 பேர் உயிரிழந்திருந்தனர். மூடப்பட்ட நுழைவு வாயில்களில் இருந்த இடிபாடுகள் நீக்கப்பட்டு உள்ளே சென்ற மீட்பு படையினர் இன்று மேலும் இரு பிரேதங்களை கண்டெடுத்துள்ளனர்.

இதைதொடர்ந்து, இந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × one =

*