;
Athirady Tamil News

கேரள மந்திரியின் மெய்க்காப்பாளர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை..!!

0

கேரள மாநில நீர்வளத்துறை மந்திரி மேத்யூ டி தாமஸ். அம்மாநில காவல்துறை ஆயுதப்படையை சேர்ந்த காவலர் சுஜித்(27) கடந்த இரண்டாண்டுகளாக மந்திரியின் மெய்க்காப்பாளராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், கொல்லம் மாவட்டம், கடக்கல் தாலுக்காவில் உள்ள வீட்டின் இரண்டாவது மாடியில் இன்று சுஜித் துப்பாக்கியால் தனது தலையில் சுட்டுக்கொண்டு பிணமாக கிடந்தார்.

தகவல் அறிந்து விரைந்துவந்த போலீசார், அவரது பிரேதத்தை கைப்பற்றி, பரிசோதனைக்கு அனுப்பிவைத்து விசாரித்து வருகின்றனர்.

மந்திரியின் மெய்க்காப்பாளர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

sixteen + 18 =

*