;
Athirady Tamil News

பூந்தோட்டத்தில் மரநடுகை விழா..!! (படங்கள்)

0

விவசாயஅமைச்சின் “வனரோபா” வேலைத்திட்டத்தின் கீழ் மரநடுகை விழா இன்றுகாலை பூந்தோட்டத்தில் நடைபெற்றது.

வவுனியா பிரதேச்செயலகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில் முதன்மை விருந்தினராக பிரதேச்செயலாளர் கா.உதயராஜா கலந்துகொண்டதுடன் மரநடுகை நிகழ்வை ஆரம்பித்துவைத்தார்.

முன்னதாக காலை 10 மணிக்கு பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயகலாசார மண்டபத்தில் இது தொடர்பான விளக்க உரையாடல் ஒன்று நடைபெற்றுருந்துடன் பிரதேசெயலாளர் உதயராஜாவால் மரநடுகையின் முக்கியத்துவம் தொடர்பாக விளக்கம்அளிக்கபட்டது.

பின்னர் பூந்தோட்டம் நரசிங்கர் வீதியில் குறித்த மரநடுகை திட்டம் ஆரம்பித்துவைக்கபட்டது.

குறித்த நிகழ்வில் வவுனியா நகரசபை உறுப்பினர்களான த.பரதலிங்கம்,பாலசிங்கம் பிரசன்னா, பூந்தோட்டம் மகாவித்தியாலய பாடசாலைஅதிபர் திருமதி கி.நந்தபாலன், தமிழரசுகட்சியின் அமைப்பாளர் ந.கருணாநிதி பிரதேசசெயலக உத்தியோகத்தர்கள், கிராமசேவையாளர், பாடசாலை மாணவர்கள் என பலரும்கலந்துகொண்டனர்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty − nine =

*