;
Athirady Tamil News

நம்பியவர்களை ஏமாற்றி, பல கோடி ரூபாவுக்கு “சோரம் போன” கூட்டமைப்பு எம்.பி அமல் என்கிற வியாழேந்திரன்..!! (படங்கள் & வீடியோ)

0

பல கோடி ரூபாவுக்கு சோரம் போன அமல் என்கின்ற வியாழேந்திரன்.. பல கோடிக்கு பேரம் போனார், அமல் என்கிற வியாழேந்திரன்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன், மஹிந்த ராஜபக்சவுடன் இன்று காலை பேச்சு நடத்திய தகவல் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் பெரும் புயலை கிளப்பியுள்ளது.

கனடாவிலிருந்து இன்று அதிகாலை இலங்கைக்கு திரும்பிய நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன், நேரடியாக மஹிந்த ராஜபக்ச அணியை சந்தித்துள்ளார், மட்டக்களப்பை சேர்ந்த பாதிரியார் ஒருவரின் ஏற்பாட்டில், வாகனத்தில் மஹிந்த ராஜபக்சவிடம் அழைத்து செல்லப்பட்டுள்ளார் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைக்கு நம்பகரமாக மூலங்களில் இருந்து தகவல் கிடைத்தது. இதையடுத்து, இன்று காலையிலிருந்து கூட்டமைப்பு முகாமிற்குள் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

கடந்த சில தினங்களிற்கு முன்னர் கனடாவிற்கு சென்ற வியாழேந்திரன், இன்று காலை இலங்கைக்கு திரும்பினார். விமானநிலையத்தில் இருந்து நேரடியாக மஹிந் ராஜபக்ச முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டார், அங்கு நீண்ட பேச்சுக்கள் நடந்து வருகிறது என்பதே கூட்டமைப்பு தலைமைக்கு உயர்மட்டத்திலிருந்து கிடைத்த தகவல்.

புளொட் அமைப்பின் அரசியல் பிரிவின் (DPLF) மூலம் தமிழ் தேசிய கூட்டமைப்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு 2015 பாராளுமன்றம் தெரிவாகிய அமல் எனப்படும் வியாழேந்திரன் “பல கோடிகள் பேரம் போன” நிலையில் இன்று மகிந்த அணிக்கு கட்சி தாவியுள்ளார்.

அவருக்கு கிழக்கு பிராந்திய அபிவிருத்தி பிரதி அமைச்சர் பதவியை பெற்றுள்ளார்.

இன்று காலை கனடாவில் இருந்து விமானம் மூலம் இலங்கை வந்தடைந்த வியாழேந்திரனை புளொட் தலைவர் மற்றும் முக்கியஸ்தர்கள் அடங்கலாக வெளிநாட்டில் இருக்கின்ற புளொட் உறுப்பினர்கள் பலரும் தொடர்பு கொள்ள முயன்ற போது அவர் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

அத்தோடு அவருடைய சாரதி மற்றும் அவருடைய MST ஆகியோருடைய தொலைபேசிகளும் முடக்கப்பட்டு இருந்தன.

அதன் பின்னர் சக்தி tv யில் வேலை செய்கின்றவருடைய வாகனத்தில் இறுதியாக ஏறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதன் பின்னரே கட்சி தாவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவர் புளொட் உறுப்பினர் கிடையாது. இவர் அண்மையில் நடைபெற்ற தேர்தலின் போது தான் பதவிக்காக புளொட்டில் சேர்ந்து இருக்கிறார் எனவும் அறிய முடிகிறது.

வியாழேந்திரன் தமிழ் தேசிய கூட்டமைப்பு சின்னத்தில் போட்டியிட்டாலும் புளொட் அரசியல் பிரிவான DPLF என்கின்ற பிரிவின் ஊடாகவே இவர் இணைந்து இந்த அரசியல் பயணத்தை தொடர்ந்து இருக்கின்றார். தற்போது இவர் பல கோடி ரூபவுக்கு சோரம் போயுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வியாழேந்திரனின் கட்சி தாவல், அரசியல் வங்குரோத்துத்தனம் மாத்திரமல்ல, பொறுக்கித்தனமும் கூட. அவரின் இன்றைய நடவடிக்கை கிழக்கு மக்கள் மீதான தேவையற்ற அழுத்தத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்தத் தருணத்தில், தமிழ் மக்கள் பிரதேச வேறுபாடுகள் கடந்து ஒன்றாக சிந்திக்க வேண்டும்; நிற்க வேண்டும்.

“தமிழ்த் தேசிய அரசியல்” பேசிக் கொண்டு புல்லுருவிகள் தேர்தல் களம் காணுவதும், பின்னர் வேசம் கலைத்து சுயரூபம் காட்டுவதும் புதிதல்ல. சிவநாதன் கிஷோர், பியசேன வரிசையில்… இன்றைக்கு வியாழேந்திரன் அவ்வளவு தான். இவர்களினால் தமிழ்த் தேசியமோ, தமிழ்த் தேசிய அரசியலோ வீழ்ந்து விடாது. அடுத்த, தேர்தலில் அரசியல் அநாதையாகி விடப்போகும் வியாழேந்திரனுக்கு காலம் எல்லாவற்றையும் கற்பிக்கும். கறை கழுவப்படாத மனிதனாக வாழ்க்கையைத் தொலைப்பார். சொந்த மக்களினாலேயே கைவிடப்படுவார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

6 − six =

*