;
Athirady Tamil News

தேசிய ரீதியில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் வவுனியாவிற்கு 10 பதக்கங்கள்..!! (படங்கள்)

0

கொழும்பு பாதுக்க பகுதியில் அமைந்துள்ள சிறி பியரத்தின மத்திய கல்லூரியில் 27-10-2018 தொடக்கம் 31-10-2018 வரை தேசிய ரீதியில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் வவுனியாவைச் சேர்ந்த வீரர் வீராங்கனைகள் 10 பதக்கங்களை தனதாக்கி கொண்டுள்ளனர்.

அகில இலங்கை பாடசாலை குத்துச்சண்டை சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் வவுனியா பூந்தோட்டம் திருஞானசம்பந்தர் பாடசாலை 9 பதக்கங்களையும், விபுலானந்தா கல்லூரி ஒரு பதக்கத்தையும் கைப்பற்றி வவுனியாவிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

மூன்று தங்கப்பதக்கங்கள், இரண்டு வெள்ளி பதக்கங்கள், ஐந்து வெண்கலப்பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.

வவுனியா குத்துச்சண்டை பயிற்றுவிப்பாளர்களான எம்.எம்.சுரங்க மற்றும் எம்.நிக்சன் ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் 12 பேர் பங்குபற்றிய இந்நிகழ்வில் 10 பேர் பதக்கங்களை சுவீகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two + twenty =

*