;
Athirady Tamil News

“புளொட்” தலைவர் சித்தார்த்தன், “இப்போதைய நிலை” குறித்து அதிரடிப் பேட்டி..!! (வீடியோ)

0

“புளொட்” தலைவர் சித்தார்த்தன், “இப்போதைய நிலை” குறித்து அதிரடிப் பேட்டி..

புளொட்” தலைவர் சித்தார்த்தன், “இப்போதைய நிலை” குறித்து அதிரடிப் பேட்டி.. (வீடியோ)

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்திற்கு மத்தியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு யாருக்கு ஆதரவு வழங்கப் போகின்றது என்பதை ஒருமித்த தீர்மானமாகவே இருக்கும் என்று கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளில் ஒன்றான புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்தன் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவிற்கும் – தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையில் நாளைமறுதினம் 7 ஆம் திகதி பேச்சுவார்த்தையொன்றும் நடைபெறவுள்ளதாகவும் தெரிவித்துள்ள சித்தார்த்தன், அதன் பின்னர் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் இணைந்து கூட்டுத் தீர்மானத்தை எடுக்கும் என்றும் கூறயுள்ளார்.

கூட்டமைப்பின் இந்தத் தீர்மானம் ஒருமித்து ஒன்றாகவே இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ள சித்தார்த்தன், உதிரிகளான மஹிந்த – மைத்ரி அணியில் இணையும் நிலை இனி ஏற்படாது என்றும் யாழ்ப்பாணத்தில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அடித்துக் கூறியுள்ளார்.

புதிய பிரதமராக பதவியேற்ற மஹிந்த ராஜகபச்ச நாடாளுமன்றில் தனக்கு தேவையான பெரும்பான்மை பலத்தை நிருபிப்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட ஏனைய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களை கோடிக்ணக்கான பணத்தை கொடுத்து விலைக்கு வாங்கி வருவதாக தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இதற்கமையவே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடளுமன்ற உறுப்பினர்களுக்கும் பேரம் பேசப்பட்டதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனும் கடந்தவார இறுதியில் அம்பலப்படுத்தியிருந்தார்.

எனினும் இந்த குற்றச்சாட்டை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிராகரித்திருந்த நிலையில், மைத்திரி மஹிந்த கூட்டணிக்கு ஆதரவு வழங்குமாறு தன்னுடன் மஹிந்த ராஜபக்சவின் புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தொலைபேசியில் கலந்துரையாடியதாகவும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்தன் குறிப்பிட்டார்.

இலங்கை அரச தலைவர் மைத்ரிபால சிறிசேனவுடன் எதிர்வரும் ஏழாம் திகதி தமிழ் தேசியக் கூட்டமைப்பு கலந்துரையாடலொன்றை நடத்தவுள்ளதாகவும் தெரிவித்த சித்தார்த்தன், அதன் போது தாம் முன்வைக்கும் யோசனைகளுக்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவிக்கும் பட்சத்தில் அவற்றை ஊடகங்களுக்கு பகிரங்கமாக அறிவிப்போம் என்றும் குறிப்பிட்டார்.

இதேவேளை, அரசியல் கைதிகளின் விடுதலை, காணமல் போனவர்களிற்கான தீர்வு மற்றும் இனப்பிரச்சனைக்கான தீர்வினை மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால் வழங்க முடியும் என்று நம்பிக்கை வெளியிட்ட சிர்த்தாத்தன், அவருடன் இருக்கும் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோரினால் தீர்வுகள் வழங்க மறுக்கப்படலாம் எனவும் குறிப்பிட்டார்.

த.சித்தாத்தன் தலைமையில் வவுனியா கோவில்குளம் சந்தியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்ற தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் (PLOTE) மத்தியகுழு கூட்டத்திலேயே அவர் இந்தத’ தகவலைத் தெரிவித்திருந்தமை சுட்டிக் காட்டத்தக்கது.

தகவல்… “புளொட்” ஊடகப் பிரிவு.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

thirteen − one =

*