;
Athirady Tamil News

நீரில் மூழ்கி காணாமல் போயுள்ள மாணவன்..!!

0

புளத்கொஹுபிட்டிய, மொரன்தொட்ட, குருகொட ஓயாவில் நீராடிக் கொண்டிருந்த பாடசாலை மாணவன் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

மூன்று மாணவர்கள் அங்கு குளிப்பதற்காக சென்றுள்ளதாகவும், அதில் ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

வரகாபொல, எத்னாவல பிரதேசத்தைச் ​சேர்ந்த 17 வயதுடைய கேகாலை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவனே காணாமல் போயுள்ளார்.

பொலிஸார், கடற்படையினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து மாணவனை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × 1 =

*