;
Athirady Tamil News

பேய் போல வேடமிட்டு பயமுறுத்தும் குரங்கு: ஒரு வேடிக்கையான வீடியோ..!!

0

Borneo தீவில் அமைந்துள்ள வன விலங்குகள் காப்பகம் ஒன்றில் orangutan வகை குரங்கு ஒன்று, மனிதர்கள் பேய் போல வேடமிட்டு சக மனிதர்களை பயமுறுத்துவது போல வேடிக்கையாக பயமுறுத்தும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

மனிதர்கள் முகமூடி அணிந்து கொண்டு அல்லது துணியால் மூடிக்கொண்டு மற்றவர்களை பயமுறுத்துவது போலவே குரங்கு ஒன்று ஒரு சாக்குப்பையை தலையில் மாட்டிக் கொண்டு கைகளை ஆட்டி மற்ற குரங்குகளை பயமுறுத்துகிறது.அந்த சாக்குப்பையில் உள்ள துவாரம் வழியாக பார்த்துக் கொண்டே அது மற்ற குரங்குகளை பயமுறுத்துகிறது

பயமுறுத்திக் கொண்டே அது நெருங்கி வரும் அந்த குரங்கு இன்னொரு குரங்கின் மீதே விழுந்து விடுகிறது
சற்றும் பயப்படாத அந்த குரங்கு பயமுறுத்திய குரங்கை புரட்டி எடுக்கிறது.

மனிதர்களைப் போலவே நடந்து கொள்ளும் அந்த குரங்கின் செயல் வேடிக்கையாக உள்ளதோடு ஒரு கணம் சிந்திக்கவும் வைக்கிறது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

17 − 14 =

*