;
Athirady Tamil News

சமையலறை முழுவதும் படிந்திருந்த ரத்தக்கறை: தாயை காப்பாற்ற சென்ற போது மகளுக்கு நேர்ந்த சோகம்..!!

0

பிரித்தானியாவில் விவாகரத்து கேட்ட மனைவியையும், மகளையும் மாற்றான் தந்தை கொடூரமாக குத்தி கொலை செய்துள்ள சம்பவம் தொடர்பாக நீதிமன்றம் அதிரடி தீர்ப்பினை வெளியிட்டுள்ளது.

பிரித்தானியாவை சேர்ந்த லாரா மோர்ட்டெமர் (31) தன்னுடைய முதல்கணவரை விட்டு பிரிந்து கடந்த 5 வருடங்களுக்கு முன்னதாக கிறிஸ்டோபர் பூன் (28) என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக கிறிஸ்டோபர் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதை லாரா கண்டுபிடித்து சண்டையிட்டுள்ளார்

இதனையடுத்து அவரை பிரிந்து செல்ல முடிவெடுத்த லாரா, கிறிஸ்டோபரிடம் மே மாதம் விவாகரத்து கோரியுள்ளார்

இதனால் ஆத்திரமடைந்த கிறிஸ்டோபர், சமையலறையில் இருந்த கத்தியை எடுத்து மனைவியை சரமாரியாக குத்தியுள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவருடைய 11 வயது மகள் எலே டல்பி, தாயை காப்பாற்ற முயற்சி செய்துள்ளார்

ஆனால் மிருகமாக மாறியிருந்த கிறிஸ்டோபர் எலேவையும் சரமாரியாக கத்தியால் குத்த ஆரம்பித்துள்ளார். இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து கிறிஸ்டோபரை கைது செய்த பொலிஸார், இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அங்கு வழக்கினை விசாரித்த நீதிபதி, குற்றவாளிக்கு 29 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்தார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × 4 =

*