;
Athirady Tamil News

மொன்டானா ஐக்கிய அமெரிக்காவுடன் 41-வது மாநிலமாக இணைந்த நாள்: 8-11-1889..!!

0

மொன்டானா ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் ஹெலேனா. இம்மாநிலம் ஐக்கிய அமெரிக்காவில் 41-வது மாநிலமாக 1889-ல் இணைந்தது.

இதேதேதியில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்வுகள்:-

* 1895 – எதிர்மின் கதிர்களைச் சோதனையிடும் போது வில்ஹெம் ரொண்ட்ஜென் எக்ஸ் கதிர்களைக் கண்டுபிடித்தார்.
* 1917 – ரஷ்யாவில் அக்டோபர் புரட்சியை அடுத்து லெனின், ட்ரொட்ஸ்கி, ஸ்டாலின் ஆகியோருக்கு முழு அதிகாரமும் தரப்பட்டது.
* 1923 – மியூனிக் நகரில் ஹிட்லர் தலைமையில் நாசிகள் ஜெர்மனிய அரசைக் கவிழ்க்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது.
* 1938 – பாரிஸ் நகரில் ஜெர்மனிய தூதுவர் கொலை செய்யப்பட்டதை அடுத்து ஜெர்மனியிலும் ஆஸ்திரியாவிலும் யூதர்களுக்கு எதிராக வன்முறைகள் கிளம்பின.
* 1939 – மியூனிக் நகரில் ஹிட்லரைக் கொலை செய்ய எடுக்கப்பட்ட முயற்சி தோல்வியடைந்தது.
* 1942 – மேற்கு உக்ரேனின் தெர்னோப்பில் நகரில் நாசி ஜேர்மனியினர் 2,400 யூதர்களை பெல்செக் நகரில் இருந்த வதை முகாமுக்கு அனுப்பினர்.
* 1950 – கொரியப் போர்: ஐக்கிய அமெரிக்க வான்படையினர் வட கொரிய மிக் விமானங்கள் இரண்டை சுட்டு வீழ்த்தினர்.
* 1965 – பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் மண்டலம் அமைக்கப்பட்டது.
* 1977 – கிமு 1ம் நூற்றாண்டைச் சேர்ந்த கிரேக்க மன்னன் இரண்டாம் பிலிப்பு என்பவனின் சமாதி மனோலிஸ் அண்ட்ரோனிக்ஸ் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
* 1987 – வடக்கு அயர்லாந்தில் பிரித்தானிய இராணுவ நினைவு நிகழ்வொன்றில் ஐரியக் குடியரசு இராணுவத்தினரின் குண்டு வெடித்ததில் 12 பேர் கொல்லப்பட்டனர்.
* 2006 – வாகரை குண்டுத்தாக்குதல்: மட்டக்களப்பு வாகரையில் இலங்கை இராணுவத்தினர் ஏவிய பல்குழல் எறிகணை வீச்சுத் தாக்குதலில் 40 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 125-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
* 2006 – பாகிஸ்தானில் தர்காய் என்ற இடத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் 45 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்

* 1680 – வீரமாமுனிவர், இத்தாலியத் தமிழறிஞர் (இ. 1742)
* 1831 – லிட்டன் பிரபு, இந்தியாவின் 30-வது பிரித்தானிய ஆளுநர் (இ. 1880)
* 1875 – சியூ சின், சீனப் புரட்சியாளர், பெண்ணிய எழுத்தாளர் (இ. 1907)
* 1893 – துவாரம் வேங்கடசுவாமி நாயுடு, வயலின் இசைக் கலைஞர் (இ: [[1964])
* 1900 – ந. பிச்சமூர்த்தி, தமிழ் இலக்கிய முன்னோடிகளுள் ஒருவர் (இ. 1976)
* 1902 – ஜி. ஜி. பொன்னம்பலம், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (இ. 1977)
* 1903 – அல்பிரட் தம்பையா, இலங்கைத் தமிழ் தொழிலதிபர், அரசியல்வாதி
* 1912 – டி. எஸ். சந்தானம், தமிழகத் தொழிலதிபர் (இ. 2005)
* 1923 – ஜாக் கில்பி, நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர் (இ. 2005)
* 1926 – டார்லீன் சி. ஆப்மேன், அமெரிக்க அணுக்கரு வேதியியலாளர்
* 1927 – லால் கிருஷ்ண அத்வானி, இந்திய அரசியல்வாதி
* 1969 – உபேந்திரா லிமாயி, இந்தியத் திரைப்பட நடிகர்
1976 – பிரெட் லீ, ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்
1986 – ஏரன் சுவோற்சு, அமெரிக்க கணினியியலாளர் (இ. 2013)

இறப்புகள்

* 955 – இரண்டாம் அகாப்பெட்டஸ் (திருத்தந்தை)
*1674 – ஜான் மில்டன், ஆங்கிலேயக் கவிஞர் (பி. 1608)
* 1958 – சி. கணேசையர், இலங்கைத் தமிழறிஞர் (பி. 1878)
* 2000 – சோ. சிவபாதசுந்தரம், வானொலி ஒலிபரப்பாளர், ஊடகவியலாளர், எழுத்தாளர் (பி. 1912)
* 2009 – வித்தாலி கீன்ஸ்புர்க், நோபல் பரிசு பெற்ற உருசிய இயற்பியலாளர் (பி. 1916)
* 2013 – சிட்டிபாபு, இந்திய நடிகர் (பி. 1964)
* 2014 – வி. சிவசாமி, ஈழத்துத் தமிழறிஞர், பேராசிரியர் (பி. 1933)
* 2014 – ஐ. எஸ். முருகேசன், தமிழக இசைக் கலைஞர் (பி. 1930)
* 2015 – மாதுலுவாவே சோபித்த தேரர், இலங்கைப் பௌத்த துறவி, அரசியல் செயற்பாட்டாளர் (பி. 1942)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two + three =

*