;
Athirady Tamil News

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட இளைஞன் சிகிச்சை பலனின்றி பலி..!!

0

நிவித்திகல – தம்மரதன பகுதியில் வர்த்தக நிலைய உரிமையாளர் ஒருவரும் அங்கு வந்த சிலருக்குடையில் ஏற்பட்ட முரண்பாடு கைகலப்பானத்தில் காயங்களுக்குள்ளான வர்த்தக நிலைய உரிமையாளர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு வைத்தியசாலையில் கொண்டுவரும் நிலையில் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நிவித்திகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்மரதன பகுதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் கடந்த 5 ஆம் திகதி வர்த்தக நிலைய உரிமையாளருக்கும் அங்கு வந்திருந்த சிலருக்குமிடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இதன்போது கூரிய ஆயுதங்களினால் கடையின் உரிமையாளர் பலமாக தாக்கப்பட்டு காயங்களுக்குள்ளாகியுள்ளார்.

இதனையடுத்து காயங்களுக்குள்ளானவரை பிரதேசவாசிகள் ரத்னபுர வைத்தியசாலையில் அனுமதித்துள்ளானர். அங்கு சிகிச்சை பெற்று வந்தரை நேற்று மேலதிக சிகிச்சைகளுக்காக அவரை கொழும்பு வைத்தியசாலைக்கு அம்பியூலன்ஸ் வண்டியில் கொண்டுவரும் நிலையில் அவருக்கு அம்பியூலன்ஸினுள் ஏற்பட்ட மூச்சுத் தினறல் காரணமாக அவரை அவசரமாக அவிசாவளை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

எனினும் அவரை அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சையளிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி மரணித்துள்ளார். இதனையடுத்து அவரது சடலமானது இன்றைய தினம் மரண பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இச்சம்பவத்தின் போது 28 வயதுடைய வடகுரவிட பிரதேசத்தைச் சேர்ந்த சிசித சேனாரத்ன என்பவரே மரணித்துள்ளார். இவரது மரணத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை இனங்கண்டுள்ள பொலிஸார் குறித்த நபர்களை தேடிச் சென்ற வேளையில் அவர்கள் இடத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளமையும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சந்தேகநபர்களை தேடும் பணிகளில் நிவித்திகலை பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பில் நிவித்திகலை நீதவான் நீதிமன்றிற்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக மேலும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × 5 =

*