;
Athirady Tamil News

வவுனியாவில் தொடர் மழை காரணமாக 05 வீடுகள் சேதம்: 21 பேர் பாதிப்பு..!!

0

வவுனியாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர்மழை காரணமாக 5 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், 21 பேர் பாதிப்படைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு உதவிப்பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

சீரற்ற காலநிலை தொடர்பில் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

வவுனியாவில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதுடன், சீரற்ற காலநிலை தொடர்கிறது. இதன் காரணமாக வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மாறாஇலுப்பைக் குளம் பகுதியில் 04 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், 18 பேர் பாதிப்படைந்துள்ளனர். அத்துடன் வவுனியா பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட நந்திமித்திர கிராமத்தில் ஒரு வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், 3 பேர் பாதிப்படைந்துள்ளனர்.

இதனடிப்படையில் இதுவரை 05 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் 21 பேர் பாதிப்படைந்துள்ளனர். மழை தொடர்ந்து பெய்து வருவதால் எதிர்வரும் நாட்களில் பாதிப்புக்கள் அதிகரிக்கலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × 4 =

*