;
Athirady Tamil News

நகரசபையின் வடிகான் தூர்வாரும் நடவடிக்கையை தடுத்து நிறுத்திய நகரசபை உறுப்பினர்கள்..!!!

0

வவுனியா பட்டானிச்சூர் பகுதியில் நகரசபையினரால் வடிகான் தூர்வாரும் நடவடிக்கை இன்று (08) முன்னெடுக்கப்பட்டபோது அப்பகுதியை சேர்ந்த நகரசபை உறுப்பினர்கள் இருவர் தலையிட்டு தூர்வாரும் வேலையை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது
புட்டானிச்சூர் மூன்றாம் ஒழுங்கை பகுதியை சேர்ந்த மக்கள் மழை காலத்தில் நீர் வடிகான்களில் தேங்கி நிற்பதால் டெங்கு போன்ற நோய்கள் பரவும் அபாயம் காணப்படுகின்றது எனவே நகரசபை வடிகான்களை அகலப்படுத்தி செப்பனிட்டு தருமாறு எழுத்து மூலமாக கோரிக்கை விடுத்த நிலையில் வவுனியா நகரசபையின் உப நகரபிதா எஸ்.குமாரசாமியின் நடவடிக்கையின் நிமித்தம் அப்பகுதியில் தூர்வாரும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

நீர் வடிகான் அமைந்திருந்த பகுதிக்கு மேலாக கடை ஒன்றை அமைத்திருந்த நபர் ஒருவர் நகரசபையினர் முன்னெடுத்த வேலைத்திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்டதுடன் குறித்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளருக்கு ஆதரவாக குறித்த பகுதியை சேர்ந்த நகரசபை உறுப்பினர் இருவர் செயற்பட்டு மக்கள் நலன்சார்ந்த வேலைத்திட்டத்தை தடுத்து நிறுத்தி நகரசபையின் செயற்பாட்டுக்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளனர்.

இச்சம்பவம் பற்றி கருத்து தெரிவித்த பிரதேச மக்கள்
தனி ஒரு நபருக்காக நகரசபையின் மக்கள் நலன் சார்ந்த வேலைத்திட்டத்தை தடுத்து நிறுத்தியமையை ஏற்றுக்கொள்ள முடியாது. மழை தொடர்ந்தும் பெய்து வருவதால் தண்ணீர் வெளியேற வழி இன்றி வீடுகளுக்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது ஆகவே தனி நபர்சார்ந்து முடிவுகளை எடுக்காமல் நகரசபை உறுப்பினர்கள் பிரதேச மக்கள் சார்ந்து நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seventeen + 12 =

*