;
Athirady Tamil News

தற்போதைய அரசியல் நெருக்கடியைத் தீர்த்துவைப்பதற்கு சகல மதங்களின் தலைவர்களும் முன்வர வேண்டும்..!!

0

தற்போதைய அரசியல் நெருக்கடியைத் தீர்த்துவைப்பதற்கு சகல மதங்களின் தலைவர்களும் சமூகத் தலைவர்களும் சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள் மற்றும் மூத்த பிரஜைகளும் தலையீடுசெய்ய முன்வர வேண்டும் என்று இலங்கையின் பிரபலமான அரசியல் விஞ்ஞானி பேராசிரியர் ஜெயதேவ உயன்கொட தெரிவித்துள்ளார்.

நாட்டின் சகல துறைகளிலும் பாரதூரமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் இந்த நெருக்கடி நிலையை தீர்க்க தவறினால் வன்முறைகளில் சென்று முடியலாம் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

கொழும்பு புதிய நகரமண்டபத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற மாதுலுவாவே சோபிததேரர் நினைவு நீங்கள்வில் பேருரையை நிகழ்த்திய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

“சகல குழுக்களினதும் ‘தார்மீகத் தலையீடு’ ஒன்றே இன்றைய தருணத்தில் எமக்குத் தேவை. தற்போதைய நெருக்கடிக்கு அரசியல் கட்சிகளினாலும் குழுக்களினாலும் மாத்திரம் தீர்வைக் கண்டுவிட முடியாது.

மாதுலுவாவே சோபிததேரோ தார்மீகத் தலையீடுகளைச் செய்யக்கூடியதாக இருந்த சிவில் சமூக இயக்கமொன்றின் செயற்பாடுகளுக்காக தன்னை அர்ப்பணித்திருந்தார்.

அதேபோன்ற அணுகுமுறையே இன்று – முன்னென்றும் இல்லாத வகையிலான அரசியல் நெருக்கடிக்குள் முழு நாடுமே அகப்பட்டிருக்கும் ஒரு நேரத்தில் எமக்குத் தேவைப்படுகிறது.

அத்தகைய அணுகுமுறை இல்லாத பட்சத்தில் இன்றைய நெருக்கடி பெரும் இரத்தக்களரியாக மாறக்கூடிய பேராபத்து இருக்கிறது. எதிர்வரும் நாட்களில் பாராளுமன்றத்துக்கும் நிறைவேற்று அதிகாரத்துக்கும் இடையே கடுமையான மோதல் ஒன்று ஏற்படும் என்றே எனக்குத் தெரிகிறது.

இணக்கத்தீர்வு ஒன்று இல்லாத பட்சத்தில் தற்போதைய நெருக்கடி வன்முறைகளில் சென்று முடியலாம்” என அவர் எச்சரிக்கை விடுத்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

12 + 13 =

*