;
Athirady Tamil News

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது?..!!

0

நாடாளுமன்றம் அதன் ஆயுள்காலம் நிறைவடைவதற்கு முன்னர் இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் கலைக்கப்பட்டது.

இந்தத் தகவலை அரச ஊடகம் உறுதிப்படுத்தியுள்ளது. எனினும் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கான அரச வர்த்தமானி இன்னும் வெளியிடப்படவில்லை.

19ஆவது அரசியலமைப்பு திருத்தின் அடிப்படையில் நாடாளுமன்றின் ஆயுள்காலம் 4 ஆண்டுகளும் 6 மாதங்களும் நிறைவடையாத நிலையில் ஜனாதிபதியால் கலைக்க முடியாது. நாடாளுமன்றின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அங்கீகாரத்துடனே ஜனாதிபதி நாடாளுமன்றைக் கலைக்க முடியும்.

எனினும் 19ஆவது திருத்தச் சட்டத்தை புறந்தள்ளிவிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றைக் கலைத்துள்ளார்.

இதேவேளை, நாடாளுமன்றைக் கலைக்கும் ஜனாதிபதியின் உத்தரவை ஏற்று அரச வர்த்தமானியை வெளியிடுவதறற்கு தயாராக உள்ளதாக அரச அச்சகத் திணைக்களம் அறிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seven + sixteen =

*