;
Athirady Tamil News

கொலைச் சந்தேகநபர்கள் இருவர் கைது..!!

0

மனித கொலைகள் சம்பந்தமாக தேடப்பட்டுவந்த இரண்டு பேர் நவகமுவ, நவகந்தை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

மிரிஹான, விஷேட குற்ற நடவடிக்கை பிரிவு அதிகாரிகளால் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹங்வெல்ல, ஜல்தர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தக்கப்பட்டு இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இந்த சுற்றிவளைப்பு நடத்தப்பட்டுள்ளது.

16 மற்றும் 19 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள், ரணாலை, ஜல்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் ஹோமாகம நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதுடன், மிரிஹான பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × two =

*