;
Athirady Tamil News

அரசியல் ஆதரவாளரின் வீட்டிற்கு தாக்குதல் : நாவலப்பிட்டியில் சம்பவம்..!!

0

நாவலப்பிட்டி – ஹைபோட் பிரதேசத்தின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஆதரவாளர் ஒருவரின் வீட்டிற்கு இனந்தெரியாத நபர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை குறித்த நபரின் வீட்டிற்கு வந்த நால்வர் அடங்கிய குழுவினர் வீட்டிற்கும் வீட்டினருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் கார் மற்றும் முச்சக்கர வண்டி மீது தாக்குதல் மேற்கொண்டு சேதப்படுத்தி விட்டு தப்பித்துச் சென்றுள்ளனர்

குறித்த சம்பவம் தொடர்பாக வியாபாரியான வீட்டு உரிமையாளர் நாவலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பாட்டிற்கமைய விசாரணை செய்த பொலிஸார் சந்தேகத்தின் பேரில் இருவரை கைது செய்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × four =

*