;
Athirady Tamil News

பான் குடா ஓயாவில் நீராட சென்ற சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் மூவர் நீரில் மூழ்கி பலி..!!

0

இரத்தினபுரி – பலாங்கொடை, பான் குடா ஓயாவில் நீராட சென்ற சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் மூவர் நீரில் மூழ்கி உயரிழந்தனர். அவர்கள் மூவரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.

நீரில் மூழ்கிய மாணவர்களை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர் இன்று முற்பகல் 10.30 அளவில் அவர்கள் உயிரிழந்தனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் மூன்றாம் வருடத்தில் கல்வி பயிலும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த செல்வரட்ணம் திசான் (வயது-25), வட்டுக்கோட்டையைச் சேர்ந்த சரவணபவன் கோபிசன் (வயது-23) மற்றும் நல்லூரைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் சாரங்கன் (வயது-25) ஆகிய மூவருமே உயிரிழந்தனர்.

உயிரிழந்த மாணவர்களின் சடலங்கள் பலாங்கொடை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × 5 =

*