;
Athirady Tamil News

இந்தியாவிற்கு காத்திருக்கும் அதிர்ச்சி.! ஆஸ்திரேலிய அணியில் திருப்பம்.!!

0

இந்தியா ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் சென்று மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாட உள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் முதலில் நடைபெறுகிறது. அதன்பின் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் டிசம்பர் 6-ந்தேதி அடிலெய்டில் துவங்குகிறது.

ஆஸ்திரேலியா அணியில் மிட்செல் ஸ்டார்க், ஹசில்வுட், பேட் கம்மின்ஸ் போன்ற முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களும், சுழற்பந்து வீச்சாளரான நாதன் லயனும் இருக்கின்றனர்.

வார்னர் மற்றும் ஸ்மித் ஆகியோர் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் களம் இறங்க முடியாக நிலையில் உள்ளனர். இதனால் பேட்டிங்கில் ஆஸ்திரேலியா அணி வலிமை இழந்து காணப்படுகிறது.

இந்நிலையில் நாதன் லயன், நாங்கள் கடும் சவாலை கொடுக்க தயாராக உள்ளோம் என்று தெரிவித்துள்ளார். இந்திய தொடர் பற்றி நாதன் லயன் தெரிவிக்கையில்‘‘எங்களிடம் அற்புதமான இளம் பேட்ஸ்மேன்கள் இருக்கின்றனர். ஆஸ்திரேலியா மண்ணில் சிறப்பாக விளையாடும் வகையில் சர்வதேச லெவல் கிரிக்கெட்டர்களை வைத்திருக்கிறோம் ’’ என்று அவர் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

8 + 15 =

*