;
Athirady Tamil News

ஜனாதிபதி – பிரதமர் இடையில் மற்றுமொரு சந்திப்பு..!!

0

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய அரசியல் கட்சி தலைவர்களுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் பொது தேர்தலில் கூட்டணி ஒன்றாக போட்டியிட உள்ளதாகவும் அதற்கான குறியீடு என்ன என்பது தொடர்பான இறுதி தீர்மானத்தை எடுப்பதற்காகவும் இந்த கலந்துரையாடல் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, பிவிதுரு ஹெல உறுமய, மக்கள் கட்சி ஆகிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பொது உடன்பாடு ஒன்றிற்கு வருவதற்காக இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து விலகிய உறுப்பினர்களுக்கும் இடையில் நேற்று (11) இரவு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இதன்போது எதிர்வரும் தேர்தலில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையும் என அமைச்சர் எஸ்.பீ திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

16 + one =

*