;
Athirady Tamil News

யாழில் குளத்தில் நீராடச் சென்றவர் நீரில் மூழ்கி பலி..!!

0

குளத்தில் நீராடச் சென்றவர் குளத்து சேற்றினில் புதையுண்டு உயிரிழந்துள்ளார்.இச் சம்பவம் இன்று நண்பகல் 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது.அல்வாய் கிழக்கு பட்டியோடையைச் சேர்ந்த 47 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நண்பர்களுடன் அல்வாய்ப் பகுதியில் உள்ள மாயக்கைக் குளத்தில் நீராடியுள்ளார் இதன் போதே குறித்த நபர் சேற்றில் புதையுண்டு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரது சடலம் இது வரை மீட்க்கப்படவில்லை,நாளை காலையிலேயே மீடக்கும் பணி இடம்பெறும் என பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “யாழ்.தமிழன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eighteen − seven =

*