;
Athirady Tamil News

தலைவலியின் போது ஏற்படும் இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீங்க..!!

0

அதிக மன அழுத்தம் காரணமாக கடுமையான தலைவலி பிரச்சனைகள் சிலருக்கு ஏற்படும். ஆனால் அதுவே கொஞ்சம் நாள்பட்ட தலைவலியாக இருந்தால்அதற்கு பல்வேறு உடல் ரீதியான பிரச்சனைகள் உள்ளது.

மேலும் இது குறித்து ஒருசில ஆபத்தான அறிகுறிகள் தென்பட்டால் அதை தாமதிக்காமல் மருத்துவ ஆலோசனையை பெற வேண்டும். அந்த அறிகுறிகளை பற்றி தெரிந்துக் கொள்வோம்.

தலைவலியின் ஆபத்தான அறிகுறிகள்
தினமும் அதிக நேரம் கண்களுக்கு வேலை கொடுப்பதால், கண்களில் அதிக அழுத்தம் ஏற்படுகிறது. இதனால் கடுமையான தலைவலி பிரச்சனைகள் ஏற்படும்.

நாம் உட்காரும் போது, நமது கழுத்தின் பின் பகுதி மற்றும் முதுகுத்தண்டுப் பகுதியில் கடுமையான வலியை உணரக் கூடும்.

அதிகப்படியான தலைவலி மற்றும் இடுப்பு வலி காரணமாக சில நேரங்களில் வாந்தி மற்றும் வயிற்று குமட்டல் போன்ற பிரச்சனைகளைக் கூட ஏற்படுத்தும்.

தலைவலி அதிகமாக இருப்பதால், சிலருக்கு கடுமையான காய்ச்சல், சளி போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதற்கு கூட அதிக வாய்ப்புகள் உள்ளது.

அன்றாடம் நமது செய்யும் செயல்கள் மற்றும் நடந்துக் கொள்ளும் விதங்களில் அதிக மாற்றங்கள் ஏற்படும். அதிலும் சிலர் அதிகப்படியான கோபம், மன உளைச்சலுக்கு ஆளாவார்கள்.
குறிப்பு

மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகள் தென்பட்டால், உடனே மருத்துவரை அணுக வேண்டும். ஏனெனில் இது மூளை தொடர்பான நோயாக கூட இருக்கலாம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty + seven =

*