;
Athirady Tamil News

சட்டவிரோத மதுபான போத்தல்களுடன் இளைஞர் கைது..!!

0

கொச்சிக்கடைப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சட்டவிரோத மதுபான விநியோகத்தில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கை நேற்று பிற்பகல் 3 மணியளவில் கொச்சிக்கடை – மடம்பால்ல வீதியின் பாலத்திற்கு அண்மையில் இடம்பெற்றுள்ளது.

சட்ட விரோத மதுபான விநியோகத்தில் ஈடுபட்டு கொண்டு இருந்த குறித்த இளைஞன் பேலியகொடை குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் 32 வயதுடைய கொச்சிக்கடை பகுதியை சேர்ந்தவர் என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதுடன், அவரிடமிருந்து 33750 மில்லிலீட்டர் 45 சட்டவிரோத மது பான போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்துடன், மேலதிக விசாரணைகளை பேலியகொடை குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × 2 =

*