;
Athirady Tamil News

சளி மற்றும் இருமலை போக்க??..!!

0

பொதுவாக அனைவருக்குமே காரசாரமான உணவுகளை பிடிக்கும். பச்சை மிளகாய் சாப்பிடுவதால் நமக்கு அதிகமாக நன்மைகள் கிடைக்கின்றது.

பச்சை மிளகாயில் ஆன்டி ஆக்ஸைடுகள், நார்ச்சத்து, விட்டமின் சி, கே, ஈ, இரும்பு சத்து போன்ற பல சத்துக்கள் அடங்கியுள்ளன.

பச்சை மிளகாய் சாப்பிடுவது உடலுக்கு நல்லது. ஆனாலும் அளவுக்கு அதிகமாக உணவில் சேர்த்து கொள்வது தவறாகும்.

பச்சை மிளகாயின் பயன்கள்
சளி, இருமல் பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் பச்சை மிளகாயை சமையலில் பயன்படுத்தலாம். இவ்வாறு உணவில் பச்சை மிளகாய் சேர்த்து சாப்பிடுவதால் அவை சளியின் வீரியத்தை குறைக்க உதவும்.
பச்சை மிளகாயில் உள்ள ஆன்டி ஆக்ஸைடுகள் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரித்து புற்றுநோய் உண்டாவதை தடுக்கிறது. மேலும் இது முதுமை தோற்றம் உண்டாவதையும் குறைக்கிறது.

இதில் விட்டமின் சி அதிகமாக உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கிறது. பச்சை மிளகாய் பயன்படுத்துவதால் மூக்கடைப்பு பிரச்சனை சரியாகும்.

ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக பராமரிக்கவும் உதவும். நீரிழிவு நோய் பாதிப்புக்கு ஆளானவர்கள் பச்சை மிளகாயை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.

பச்சை மிளகாயில் கலோரிகள் இல்லாததால் உடல் எடையினை குறைக்க உதவும் டயட்டில் இதனை சேர்த்து கொள்ளலாம்.

நுரையீரல் புற்றுநோய் உண்டாவதை குறைப்பதால் புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் உணவில் பச்சை மிளகாய் அதிகமாக சேர்த்து கொள்வது நல்லது.

இயற்கையாகவே பச்சை மிளகாயில் அதிகமாக இரும்புச்சத்து உள்ளதால் பெண்கள் உணவில் சேர்த்து கொள்ளலாம்.

அதிகமாக அடிப்பட்டவர்களும் காயம் அடைந்தவர்களும் உணவில் பச்சை மிளகாயினை சேர்த்து கொள்ளும் போது வலி தண்டுவடத்தின் மூலம் நேரடியாக மூளையினை தாக்குவதை தடுக்கிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two + two =

*