;
Athirady Tamil News

யாழில் நியமனக் கடிதங்களை வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே வழங்கி வைத்தார்..!! (படங்கள்)

0

வடமாகாண பொதுச்சேவைகள் ஆணைக்குழுவினால் நடாத்தப்பட்ட பரீட்சையில் சித்தி எய்தி நேர்முகத் தெரிவில் தெரிவாகியவர்களுக்கான நியமனக் கடிதங்களை வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே வழங்கி வைத்தார்.

யாழ் மாவட்டச் செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் நியமனம் வழங்கும் நிகழ்வு நேற்று காலை நடைபெற்றது.

முகாமைத்துவ உதவியாளர்கள், விவசாய போதனாசிரியர்கள், பயிற்சியாளர்கள், கடல்நீர் வளத்துறை போதனா ஆசிரியர்களுக்கள் என மொத்தம் 82 பேருக்கான நியமனக் கடிதங்களை ஆளுநர் வழங்கி வைத்துள்ளார்.

இதில் ஆளுநரின் செயலர் இ.இளங்கோவன்,உதவிச் செயலர் ஏ.எக்ஸ் செல்வநாயகம் விவசாய அமைச்சின் செயலர் க.தெய்வேந்திரம், பதில் பிரதம செயலாளர் சரஸ்வதி மோகனதாஸ், இ.வரதீஸ்வரன் மாகாணசபை செயலாளர், ரூபினி வரதலிங்கம் மகளீர் விவசாய அமைச்சு, வடமாகாண திணைக்கள ஆணையாளர்கள் அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eighteen − five =

*