;
Athirady Tamil News

நுண்நிதி நிறுவன அதிகாரிகளுக்கு சார்பாக செயற்படும் இணக்கசபை உறுப்பினர்கள்..!!

0

வவுனியாவில் இணக்கசபை உறுப்பினர்கள் நுண்நிதி நிறுவன அதிகாரிகளுக்கு சார்பாக செயற்பட்டு வருவதாக பாதிக்கப்பட்ட பெண்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

வவுனியா சைவப்பிரகாசா மகளிர் பாடசாலையில் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் இயங்கிவரும் இணக்கசபை பெரும்பாலும் நிதி விவகாரங்களை கையாண்டு தீர்ப்பு வழங்கி வருகிறது.

நுண்நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் பெற்ற பெண்கள் கடந்த மாதங்களில் ஏற்பட்ட வறட்சி மற்றும் மழையின் காரணமாக வேலைவாய்ப்பு இல்லாத நிலையில் கடன்களை மீள் செலுத்த முடியாமல் அவதிப்பட்டுவரும் நிலையில் நுண்நிதி நிறுவனங்கள் இணக்கசபையில் முறையிட்டு பணத்தினை பெற்றுக்கொள்ள நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன.

இணக்கசiபையில் நீதி வழங்குனர்களாக செயற்பட்டுவரும் ஒரு சிலர் விசாரணைகளை மேற்கொள்ளாமல் பாதிக்கப்பட்ட பெண்களின் தரப்பின் நியாயத்தை கேட்காமல் தான்தோன்றித்தனமாக நுண்நிதி நிறுவனங்களுக்கு சார்பாக தீர்ப்பு வழங்குவதாக பாதிக்கப்பட்ட பெண்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இச் செயற்பாடு குறித்து கருத்து தெரிவித்த அவர்கள்
நுண்நிதி நிறுவனங்களிடம் பெற்ற கடனுக்கு அதிகமாகவே பணம் செலுத்திவிட்டோம். அத்துடன் சேமிப்பு மற்றும் கடன் வழங்குவதற்கான செலவு என ஒரு தொகையை எடுத்;துக் கொண்டே நுண்நிதி நிறுவனங்கள் கடனை வழங்குவார்கள். கடன் தொகையை செலுத்த முடியாத மாதங்களுக்கும் வட்டிக்கு மேல் வட்டியை போட்டு மீள முடியாத இக்கட்டான நிலைக்குள் தள்ளிவிடுகின்றனர்.

இவ்வாறான செயற்பாட்டுக்கு இணக்கசபையினரும் துணை போவது வேதனையளிக்கின்றது. அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட பெண்களுக்கான கடன் தள்ளுபடி திட்டம் தொடர்பாக மாவட்ட செயலகமோ அல்லது இணக்கசபையினரோ கவனத்தில் கொள்ளாது குடும்ப பெண்களின் கழுத்தை நெரிக்கும் செயல்பாட்டில் ஈடுபட்டு வருகின்றமை நுண்நிதி நிறுவனங்களுக்கு மேலும் உற்சாகத்தை அளிக்கும் செயற்பாடாகவே இருக்கின்றது என தெரிவித்தனர்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nine + 10 =

*