;
Athirady Tamil News

போதைப்பொருள் பற்றிய விழிப்புணர்வு பேரணி..!! (படங்கள்)

0

இன்றைய காலக்கட்டத்தில் போதைப்பொருளின் தாக்கம் அதிகமாகவே காணப்படுகின்றது. பாடசாலை மாணவர்கள் கூட போதைக்கு அடிமையாகியுள்ள நிலையை அவதானிக்க கூடியதாக உள்ளது.

அதனால் அதிகளவான உயிரிழப்புகளும் நோய்களும் அவ்வப்போது ஏற்படுகின்றது.

இவ்வாறான நிலைமை குறைக்கவும் போதைப்பொருள் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட கூடிய வகையிலும் கம்பளையில் விழிப்புணர்வு பேரணி ஒன்று நடைபெற்றது.

கம்பளை காட்டம்பிட்டி பாடசாலையிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட இப்பேரணி கம்பளை நகரை சுற்றி வந்து இலங்கை போக்குவரத்து சபைக்கு முன்பாக வந்து நிறைவடைந்தது.

வாகனத்திலும், நடைப்பயணமாகவும் பேரணியை தொடர்ந்தவர்கள் அமைதியான முறையில் முன்னெடுத்து சென்றனர்.

இப்பேரணியில் மதகுருமார்கள், கம்பளை பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி உற்பட பொதுமக்கள் கலந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen − one =

*