;
Athirady Tamil News

3.9 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க நகைகளுடன் மூவர் கைது..!!

0

சட்ட விரோதமான முறையில் 24 கெரட் தங்கத்தை பெண்டன் போன்ற விதத்தில் தயாரித்து தாய்லாந்தில் இருந்து எடுத்தவர முயற்சித்த மூவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மினுவாங்கொட, ஜாஎல மற்றும் கொழும்பு 15 பகுதிகளை சேர்ந்த 39, 29 வயதானவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

18 ஆம் திகதி இரவு தாய்லாந்தின் பேங்கொக் நகரில் இருந்து வருகை தந்த ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL 407 விமானத்தின் மூலம் சந்தேக நபர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

சந்தேக நபர்களிடம் இருந்து 639 கிராம் எடையுடைய 3,931,850 ரூபா பெறுமதியான தங்க நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நகைகள் அரசுடமையாக்கப்பட்டதுடன் மூவருக்கும் 10,000 ரூபா விதம் 30,000 ரூபா தண்டப்பணமாக விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × 2 =

*