;
Athirady Tamil News

சாவகச்சேரியில் அதிகூடிய மழைவீழ்ச்சி..!!

0

யாழ்ப்பாணத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சி சாவகச்சேரி பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. அங்கு 43.2 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று யாழ்ப்பாணம் திருநெல்வேலியுள்ள வளிமண்டலவியல் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீபன் தெரிவித்தார்.

“2017ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் 611.7 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ள போதிலும் இந்த வருடம் இன்று 20ஆம் திகதிவரை 300.1 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியே பதிவாகியுள்ளது. எனினும் இன்னும் 10 நாள்கள் இருப்பதனால் அவற்றையும் ஒப்பீட்டுப் பார்க்கவேண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இறுதிவரை ஆயிரத்து 248 மில்லிமீற்றர் பதிவாகியிருந்தது. ஆனால் இந்த வருடம் இன்றுவரை 915 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியே பதிவாகியுள்ளது.

அத்துடன், நேற்று 19ஆம் திகதி காலை 8.30 மணி தொடக்கம் இன்று 20ஆம் திகதி காலை 8.30 மணிவரையும் யாழ்ப்பாணக் குடாநாட்டில் அச்சுவேலிப் பகுதியில் 23.5 மில்லிமீற்றர், நெடுந்தீவில் 17.2 மில்லிமீற்றர், பருத்தித்துறையில் 33.3 மில்லிமீற்றர் நயினாதீவில் 21.3 மில்லிமீற்றர், முல்லைத்தீவு அலம்பிலில் 21.5 மில்லிமீற்றர், வள்ளிபுனம் பகுதியில் 31.5 மில்லிமீற்றர்,

ஆனையிறவுப் பகுதியில் 38.0 மில்லிமீற்றர், சாவகச்சேரியில் 43.2 மில்லிமீற்றர், கச்சேரிப் பகுதியில் 22.9 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

10 + 14 =

*