;
Athirady Tamil News

கொள்கையளவில் இணைந்து பயணிக்க விரும்புகிறேன். ஈரோஸ் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் முன்னாள் முதல்வர் தெரிவிப்பு..!!

0

முன்னாள் வடக்கு மாகாண முதல்வர் சி வி விக்னேஸ்வரன் அவர்களுடன் ஈரோஸ் அமைப்பின் செயலாளார் தோழர் நகுலேஸ்வரன் தலைமையில் மத்தியகுழு உறுப்பினர்கள் கலந்து கொண்ட சந்திப்பு செவ்வாய்க்கிழமை(20.11.2018) இடம்பெற்றது.இச்சந்திப்பில் சமகால அரசியல் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

இவ்வேளையில் ஈரோஸ் அமைப்பு தொடர்பாக மிக உயர்ந்த மதிப்பும் தெளிவான பார்வையும் தனக்கு இருப்பதாகவும் கொள்கை ரீதியாக இணைந்து மக்களின் அரசியல் விடுதலைக்கான பாதையில் பயணிக்க விரும்புவதாகவும் கலந்து கொண்ட ஈரோஸ் தூதுக் குழுவினரிடம் முன்னாள் முதல்வர் தெரிவித்தார்.

இதனிடையே முதல்வருடனான சந்திப்பு பற்றி ஈரோஸ் அமைப்பினர் கருத்து தெரிவிக்கையில் இச்சந்திப்பானது ஆரோக்கியமாகவும் அதிசயிக்க மாற்றத்தையும் எதிர்காலதில் கொண்டுவரும் என உறுதியாக நம்பிக்கை கொள்வதாக கூறினர்.

அத்தோடு இவ்வாறான சந்திப்பு இனிவருங்காலத்தில் தொடரும் எனவும் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one + 7 =

*