;
Athirady Tamil News

பைஸர் முஸ்தபாவின் தலையீட்டால் லஹிரு மதுசங்க விடுதலை..!!

0

மாலைத்தீவில் சிறையில் வைக்கப்பட்டிருந்த லஹிரு மதுசங்க இன்று (21) விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் பைஸர் முஸ்தபாவின் தலையீட்டின் அடிப்படையில் குறித்த நபர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல்லா யமீன் மீதான கொலை சூழ்ச்சி தொடர்பில் குறித்த நபர் கைது செய்யப்பட்டிருந்தார்.

பாதுகாப்பு உத்தியோகத்தர் பதவிக்காக மாலைத்தீவு சென்றிருந்த நிலையில் குறித்த நபர் கடந்த 2015 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த மூன்று வருடங்களான அந்நாட்டு உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் குறித்த நபர் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

மாலைத்தீவு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள லஹிரு மதுசங்கவை அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் பைஸர் முஸ்தபா சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

thirteen − seven =

*