மர்மான முறையில் உயிரிழந்த இருவரின் சடலங்கள் மீட்பு..!!

செவனகல, தினூஷகம பகுதியில் குறுக்கு வீதி ஒன்றில் இருந்து மர்மான முறையில் உயிரிழந்த நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸாரிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
செவனகல பகுதியை சேர்ந்த 43 வயதுடைய ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இதேவேளை கிரிஉல்ல – பஸ்யால வீதியின் மீரிகம பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து இனந்தெரியாத நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மீரிகம, இதிபரகே பகுதியை சேர்ந்த 70 வயதுடைய ஒருவரே இவ்வாறு சடலமான மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவங்கள் தொடர்பில் செவனகல மற்றும் மீரிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.