;
Athirady Tamil News

கைம்பெண்களின் வறுமையைப் போக்க நடவடிக்கை..!!

0

வன்னியில் வாழும் கணவனை இழந்த குடும்பத் தலைவிகள் மற்றும் அத்தகைய குடும்பங்களைச் சேர்ந்தவர்களது வறுமையைப் போக்க மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் நேற்று விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, வன்னியில் வாழும் கணவனை இழந்த குடும்பத் தலைவிகளும், அத்தகைய குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் வறுமை காரணமாக கிட்னியை விற்று வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த அவலத்தை தடுத்து நிறுத்தி எமது மக்களை காப்பாற்ற வேண்டும்.

வறுமை காரணமாக வடக்கில் வாழும் கைம்பெண்கள் கிட்னியை விற்கும் ஆபத்தான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் செப்டம்பர் மாத இலங்கை தொடர்பான அறிக்கை வெளியாகியுள்ளமை அதிர்ச்சியளிக்கின்றது.

இவ்வாறு கிட்னியை விற்கும் நிலையை உடனடியாக நிறுத்த வேண்டும். உடனடியாக வாழ்வாதாரத் திட்டங்களைப் பெற்றுக்கொள்ள உங்கள் கோரிக்கையை விரைவாக எனக்கு கிடைக்கச் செய்யுங்கள். அவர்களது வாழ்வாதாரத்தை பெற்றுக்கொள்ளவும், அவர்கள் உழைத்து வாழ்வதற்குமான விரைவான நடவடிக்கையை எடுப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடமும் கலந்துரையாடி விஷேட அமைச்சரவைப் பத்திரமொன்றை சமர்ப்பித்து உரிய நடவடிக்கையை எடுக்கவுள்ளேன்.

மக்களுக்கு சேவை செய்வதற்கான விருப்பத்துடன் இருப்பவர்களை தடுத்து தமது சுயலாபங்களை நிறைவேற்றிக் கொண்டவர்களால், எமது மக்கள் இன்று இத்தகைய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இப்போது மக்களுக்கு தொடர்ந்தும் சேவை செய்வதற்கு மீண்டுமொரு வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி எமது மக்களின் அவலத்தையும், வறுமையையும் இல்லாதொழிப்பதற்கு இயலுமான முயற்சியை மேற்கொள்வேன்.

எனவே எமது மக்கள் நம்பிக்கையோடு உங்கள் கோரிக்கையை விரைவாக எனக்குக் கிடைக்கச் செய்யுங்கள். உடனடியாக செய்யக் கூடியதை உடனடியாக செய்யும் அதேவேளை நிலையான திட்டங்களை வேறாகவும் நடைமுறைப்படுத்தி எமது மக்களை தற்போதைய சூழலிலிருந்து மீட்டெக்க தேவையான அனைத்துக் காரியங்களையும் முன்னெடுப்பேன் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen − 2 =

*