;
Athirady Tamil News

சிறுநீரக நோயாளர்களுக்கு உதவி கரம் நீட்ட இலங்கையர்களுக்கு அழைப்பு..!! (வீடியோ)

0

இலங்கையில் உள்ள சிறுநீரக நோயாளர்களுக்கு உதவி கரம் நீட்ட இலங்கை டெஸ்ட் அணியின் முன்னாள் தலைவர் ரொஷான் மஹானாம அழைப்பு விடுத்துள்ளார்.

2019 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 9 ஆம் திகதி இங்கிலாந்தின் நொட்டிங்ஹாம் பகுதியில் நடைபெற உள்ள ´தாயாத 2019´ இசை நிகழ்விற்கு கலந்து கொள்ளுமாறு, இங்கிலாந்தில் வசிக்கும் இலங்கையர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்ச்சியின் ஊடாக திறட்டப்படும் பணமானது இலங்கையில் சிறுநீரக நோயாளர்களுக்காக பயன்படுத்தப்படம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இயந்திர மயமாகியுள்ள மனித வாழ்க்கையில் நோய்கள் தற்போது மனிதன் உயிரை காவும் அளவிற்கு வாழ்வோடு ஒன்றிப் போயுள்ளது.

இரத்த அழுத்தம், நீரிழிவு, புற்றுநோய் மற்றும் சிறுநீரக பாதிப்பு என்பன இன்றை வாழ்வில் சாதாரண விடயமாக மாறிவிட்டது.

அந்த வகையில் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தெரண ஊடக வலயமைப்பு மனுசத் தெரண திட்டத்தின் மூலம் பல்வேறு உதவிகளை வழங்கியுள்ளது.

இந்நிலையில் இங்கிலாந்தின் நொட்டிங்ஹாமில் நடைபெற உள்ள இந்நிகழ்விற்கு மனிதாபிமானம் கொண்ட மனிதர்களாக கலந்து கொள்ளுமாறு நாமும் உங்களை வேண்டிக் கொள்கின்றோம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 + fourteen =

*