;
Athirady Tamil News

வவுனியா கனகராயன்குளத்தில் மரம்நடுகை வாரத்தினை முன்னிட்டு மரம் நாட்டி வைப்பு..!! (படங்கள்)

0

மரம்நடுகை மாதத்தினை முன்னிட்டு வவுனியா வடக்கின் கனகராயன்குளம் மையப்பகுதியினை அண்டிய ஏ ஒன்பது வீதியின் ஒரு பக்கமாக மூன்று கிலோமீற்றர் தூரத்திற்கு மாகோகனி மரக்கன்றுகளை நாட்டும் செயற்றிட்டம் இன்று (22.11.2018) கனகராயன்குளம் பொதுநோக்கு மண்டபத்தில் சிறப்பான முறையில் ஆரம்பமானது

இந் நிகழ்வில் வவுனியா வடக்கு பிரதேசசபை தலைவர் ச. தணிகாசலம் சபை , செயலாளர் க. சத்தியசீலன் , பிரதேசசபை உறுப்பினர்கள் யெக்கொடி யெயரூபன் , நடராஐா விநாயகமூர்த்தி மற்றும் கனகராயன்குளம் முச்சக்கரவண்டிச்சங்கம் , கமக்காரஅமைப்பு , வர்த்தக சங்கம் , கிராம அபிவிருத்தி சங்கம் போன்றவற்றின் பிரதிநிதிகள் , சமுக அமைப்புக்களின் பிரதிநிதிகள் , பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு வீதியோரங்களில் மரங்களை நாட்டி வைத்தனர்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seven − one =

*