;
Athirady Tamil News

ம.பி.யில் சோகம் – பள்ளி வேன் மீது பேருந்து மோதிய விபத்தில் 6 மாணவர்கள் பலி.!!!

0

மத்திய பிரதேச மாநிலம் சட்னா மாவட்டம் பீர்சிங்கபூர் பகுதியில் பள்ளி குழந்தைகளை ஏற்றி கொண்டு வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த பேருந்தும், பள்ளி வேனும் வேகமாக மோதியது.

இந்த விபத்தில் வேனில் பயணித்த 6 மாணவர்கள் மற்றும் வேன் ஓட்டுனர் உள்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

தகவலறிந்து மீட்புக் குழுவினர் அங்கு விரைந்து சென்றனர். காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர். இதில் இருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

6 + 4 =

*