;
Athirady Tamil News

பல கோடி மதிப்பில் கடத்தல்! வசமாக சிக்கிய இலங்கை வீரர் ஜெயசூர்யா..!!

0

இலங்கை அணியின் முன்னாள் வீரரான சனத் ஜெயசூர்யா இந்தியாவிற்கு அழுகிய பாக்குகளை கள்ளத்தனமாக விற்பனை செய்த புகாரில் சிக்கியுள்ள சம்பவம் அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை அணியின் முன்னாள் அதிரடி துவக்க வீரர் சனத் ஜெயசூர்யா(49) இலங்கை அணிக்காக 110 டெஸ்ட் (6973 ஓட்டங்கள்), 445 ஒருநாள் (13430 ஓட்டங்கள்), 31 டி-20 (629 ஓட்டங்கள்) போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.

1996-ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை போட்டியில் இலங்கை அணி வெற்ற நிலையில், அந்தணியில் ஜெயசூர்யாவும் இருந்தார்.

அதன் பின் இந்தியாவில் உள்ளூரில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் விளையாடிய இவர், 2012-ஆம் ஆண்டு

இலங்கை அரசியலில் நுழைந்தார். இதையடுத்து 2013-ல் இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழுத்தலைவராக பொறுப்பேற்றார்.

அதன் பின் இலங்கை அணி 2014-ஆம் ஆண்டில் உலகக்கோப்பை, ஆசிய கோப்பை, இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட், ஒருநாள், டி-20 என அனைத்திலும் வெற்றி மேல் வெற்றியாக குவித்தது.

இந்நிலையில் சமீபத்தில் ஐசிசி.யின் ஊழல் தடுப்பு பிரிவுக்குகுழு ஜெயசூர்யா மீது குற்றம் சாட்டியது. இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் இந்தியாவுக்கு அழுகிய பாக்குகளை இலங்கையில் இருந்து விற்பனை செய்த வழக்கில் ஜெயசூர்யா தற்போது சிக்கியுள்ளார்.

இவர் மட்டுமின்றி இந்த விவகாரத்தில் மேலும் இரண்டு கிரிக்கெட் வீரர்களுக்கு தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் நாக்பூரில் பல லட்சம் மதிப்பிலான பாக்குகளை வருவாய்த்துறையினர் கைப்பற்றினர். இதை வைத்திருந்த தொழிலதிபர், ஜெயசூர்யாவின் பெயரை விசாரணையில் தெரிவித்துள்ளார்.

இதனால் இலங்கை அரசுக்கு இது தொடர்பாக ஜெயசூர்யா, மற்றும் மேலும் இரண்டு கிரிக்கெட் வீரர்கள் வரும் டிசம்பர் 2-ஆம் திகதி மும்பையில் நடக்கும் விசாரணையில் பங்கேற்க உத்தரவிட கடிதம் அனுப்பியுள்ளது.

இந்த பாக்குகள் இந்தோனேஷியாவில், இந்தியாவுக்கு நேரடியாக ஏற்றுமதி செய்தால், 108 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்படும்.

ஆனால் இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு பொருட்களை ஏற்றுமதி அல்லது இறக்குமதி செய்தாலோ, தெற்காசிய இலவச ஏற்றுமதி பகுதி என்பதால், 108 சதவீத இறக்குமதி வரி முழுமையாக தள்ளுபடி செய்யப்படும்.

இதனால் ஜெயசூர்யா தனது புகழை பயன்படுத்தி, இந்த பாக்குகள் இலங்கையில் உற்பத்தி செய்யப்பட்டவை என போலியான ஆவணங்களை தயார் செய்து இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்துள்ளார்.

இதனால் 100 கோடி மதிப்பிலான இந்த பாக்குகளை வெறும் 25 கோடிக்கு நாக்பூர் தொழிலதிபர் இறக்குமதி செய்துள்ளார்.

அதுமட்டுமின்றி இந்த அழுகிய பாக்குகளை நல்ல பாக்குகளுடன் கலப்படம் செய்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி விற்பனை செய்யவும் அந்த தொழிலதிபர் திட்டமிட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இந்த குற்றத்துக்கு உடந்தையாக இருந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூர்யா மற்றும் இருவரை இலங்கை அரசு விசாரணைக்கு அனுப்புமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

10 + five =

*